தேவையற்ற அறுவைசிகிச்சைகள்: 490 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கும் இந்திய அமெரிக்க மருத்துவர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் பணியாற்றி வரும் பிரபலமான இந்திய அமெரிக்க மருத்துவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட புகாரில் 66 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கி, வழக்கை முடித்து வைக்க முடிவாகியுள்ளது.

மொத்தம் 260 நோயாளிகளை தேவையற்ற முறையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தியதாக இருதய நோய் நிபுணரான மருத்துவர் அரவிந்த் காந்தி மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கிலேயே சுமார் 490 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க மருத்துவர் அரவிந்த் காந்தி ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும் மருத்துவர் காந்தி ஒப்புக்கொண்டுள்ள இந்த இழப்பீடு தொகை தொடர்பான முக்கிய தரவுகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கு தொடர்பில் இந்தியானா மாகாணத்தில் செயல்பட்டு வரும் மூன்று முக்கிய குழுமங்கள் இணைந்தே இந்த முடிவுக்கு வந்துள்ளது.

நோயாளிகளுக்கு தேவை இன்றி அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக மருத்துவர் காந்தி மீது சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னரே புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2012-ல் மருத்துவர் காந்தி மீது 20 நோயாளிகள் புகார் அளித்திருந்த நிலையில், 2016-ல் அது 300 புகார்களாக அதிகரித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் மருத்துவர் காந்தி மீது முதல் தீர்ப்பு 2015 டிசம்பர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்