அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை ஏதிர்த்து வழக்கு தொடர்ந்து ஜனாதிபதி டிரம்புக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப்பெரிய அடியாக அமைந்தள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டிகளமாக திகழும் பென்சில்வேனியா மாநிலத்தில் மின்னஞ்சல் மூலம் செல்லுத்தப்பட்ட மில்லியன் கணக்கான வாக்குகள் செல்லாது என்று டிரம்ப் தரப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த பென்சில்வேனியா நீதிபதி Matthew Brann, முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போடப்பட்டிருக்கும் வழக்கில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
நீதிபதியின் இந்த நடவடிக்கையின் மூலம் அடுத்த வாரம் பென்சில்வேனியாவிற்கு ஜோ பிடனின் வெற்றியை உறுதிப்படுத்த சான்றயாக அமைந்துள்ளது.
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 80,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 3 ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை முறியடிக்க முயற்சிக்கும் டொனால்ட் டிரம்புக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும்.
தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வரும் டிரம்ப், எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல் தொடர்ந்து தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நவம்பர் 3ம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற 270 இடங்களை கைப்பற்ற வேண்டிய நிலையில், ஜனாதிபதி டிரம்பை 306-232 என்ற கண்க்கில் பைடன் தோற்கடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,