ஜோ பைடன் பலவீனமான ஜனாதிபதி... போர்களுக்கு துவக்கம் குறிப்பார்: சீன ஆலோசகர் கருத்து

Report Print Arbin Arbin in அமெரிக்கா

ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் ஒருவர் கூறி உள்ளார்.

அமெரிக்கா முன்னெடுக்கும் எந்த ஒரு கடும்போக்கு நடவடிக்கையையும் எதிர்கொள்ளும் வகையில் சீனா தயாராக வேண்டும் எனவும்,

சீனா அரசாங்கத்தின் ஆலோசகரான ஜெங் யோங்னியான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்த, கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் சீனா பயன்படுத்த வேண்டும் என உள்ளூர் முக்கிய பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

நல்ல பழைய நாட்கள் முடிந்துவிட்டன... அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.

பைடன் வெள்ளை மாளிகையில் நுழைந்த பின்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரிசெய்வதறகு பைடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.

பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார். எனவே, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார்.

சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். டிரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதியான பைடன் போர்களைத் தொடங்குவார் என ஜெங் யோங்னியான் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.

குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மட்டுமின்றி பாராளுமன்றத்தில் சீனாவை இலக்கு வைத்து 300-கும் மேற்பட்ட பிரேரணைகளை குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் கொண்டு வந்துள்ளன.

இதனாலையே, ஜை பைடன் காலகட்டத்திலும் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான பிரச்சனைகள் தீர்வு எட்டாமலையே போக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்