மறுகூட்டலுக்கு 3 மில்லியன் டொலர் செலவிட்ட டிரம்ப்: பலனை அனுபவித்த ஜோ பைடன்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
879Shares

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தேர்தல் மறு கூட்டலுக்காக பெருந்தொகையை செலவிட்ட டிரம்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது இறுதி முடிவு.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடப்பு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்துள்ள நிலையில்,

தேர்தல் முறையாக நடக்கவில்லை, பல மாகாணங்களில் முறைகேடு நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

மட்டுமின்றி, சட்டப்போராட்டங்களிலும், அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ள மில்வாக்கி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்தது.

தாம் எதிர்ப்பார்த்த முடிவு வராதது கண்ட ஜனாதிபதி டிரம்ப், மொத்தமாக 3 மில்லியன் டொலர்கள் செலவிட்டு, மில்வாக்கி மாவட்டத்தில் மறுகூட்டலுக்கு அனுமதி பெற்றார்.

ஆனால், இறுதி முடிவில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு 132 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, டேன் மாவட்டத்திலும் தற்போது மறுகூட்டல் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பென்சில்வேனியா மாகாணத்திலும் ஜனாதிபதி டிரம்ப் தோல்வியை சந்தித்தார். டிரம்பின் வழக்கு ஆதாரமற்றது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்