அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்த தமிழர்! எப்படி தெரியுமா? குவியும் பாராட்டுகள்

Report Print Santhan in அமெரிக்கா
2630Shares

அமெரிக்காவில் தமிழர் ஒருவர் உழவர் சந்தை தமிழருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தின், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற மகன் உள்ளார். மணீஷ் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார்.

இவர், அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள லெக்சிங்கடன் நகரத்திற்கான மிகப் பெரிய உழவர் சந்தை கட்டடத்திற்கு வடிவமைத்துள்ளார்.

இது உழவர் சந்தைக்கு வீடாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் பொழுது போக்கு அம்சமாகவும், ஆண்டு தோறும் நகரத்தின் முக்கிய நிகழ்வுகளை கொண்டாடும் இடமாகவும் திகழ்கிறது.

பழமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் செங்கல் வளைவுகளால், நவீன வசதியுடன் கொண்ட கட்டடமாக, கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டுமான நடவடிக்கைளை மணீஷ் நிர்வகித்து வருகிறார். இது நகரத்தின் மையத்தில், ஒரு சிறப்பான இடமாகவும், புத்துயிர் திட்டமாகவும் திகழ்கிறது. புயல் வௌ்ளத்தில் பாதுகாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதி, உயர்தருமான கட்டுமான பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாசு படியாத நீர் பயன்படுத்தவும், நீர் மாசு படிந்ததை எப்படி பகுப்பாய்வு செய்து தடுப்பது குறித்தும் அக்கட்டத்தில் செயல்படுத்தபடுத்தப்பட்டு உள்ளது.

இளம் வயதில் கட்டுமான துறை நிறுவனத்தில், அவர் சிறந்து விளங்குவதை அமெரிக்க மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்