புதர்களுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஆடைகள் களையப்பட்ட இளம்பெண்ணின் கால்கள்: மரணத்தில் நீடிக்கும் மர்மம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாசில் புதர்களுக்கு நடுவே கால்கள் இரண்டு நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்ட ஒருவர், அங்கே ஒரு பெண் உடலில் ஆடைகள் எதுவும் இன்றி இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் பெயர் Alexis Sharkey (26) என்பது தெரியவந்தது.

அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை, என்றாலும், அது சாதாரண மரணம் அல்ல என பொலிசார் கருதுகிறார்கள். Alexisஇன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

வீட்டில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து Alexis வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ள அவரது தாயார் Stacey Robinault, அதன் பிறகு மகளைக் காணவில்லை என்று கூறியுள்ளார்.

facebook

இன்ஸ்டாகிராம் பிரபலமான Alexisஐ 21,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் Alexis உயிரிழந்தது எப்படி, அவர் என்ன வாக்குவாதம் செய்தார், அவரது உடைகள் களையப்பட்டிருந்தது ஏன்? என்பது போன்ற விடயங்கள் எதுவும் தெரியாத நிலையில் Alexis மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.

Alexis தொடர்பில் பொதுமக்கள் யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களை அணுகுமாறு, பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

facebook

facebook

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்