புதர்களுக்குள் நீட்டிக்கொண்டிருந்த கால்கள்: அருகே சென்று பார்த்த துப்புரவு தொழிலாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in அமெரிக்கா
14243Shares

சாலையோரம் புதர்களுக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த கால்களைக் கண்ட துப்புறவுப் பணியாளர்கள் அதன் அருகே சென்று பார்த்தபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

புதர்களுக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த கால்களைக் கண்ட துப்புறவுப் பணியாளர் ஒருவர், முதலில் அது துணிக்கடை பொம்மையாக இருக்குமோ என்று எண்ணியிருக்கிறார்.

அருகே செல்ல தயங்கிய அவர், ஒருவேளை பின்னால் பிரச்சினை ஏதும் ஏற்படலாம் என்று எண்ணி, தனது நண்பரான John Richardson என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

Richardson வந்ததும், இருவருமாக புதர்களுக்கு அருகே சென்று பார்க்க, பதறிப்போயிருக்கிறார்கள். முற்றிலும் உடைகளின்றி அங்கே கிடந்தது பொம்மை அல்ல, அது ஒரு இளம்பெண்ணின் உடல்.

உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழைத்துள்ளார் Richardson. பொலிசார் வந்தபின் நடத்திய விசாரணையில், அது Houstonஐச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான Alexis Sharkey (26) என்பது தெரியவந்துள்ளது.

இதுவரை Alexis மரணம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிசார் உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்