பெற்றோருடன் ஒரே குடும்பத்தில் நால்வர் சடலமாக மீட்பு: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
298Shares

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் ஞாயிறன்று பகல் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொல்லப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் கொல்லப்பட்டவர்களில் இருவர் கணவன் மனைவி எனவும் அவர்களது பிள்ளைகள் இருவர் 3 மற்றும் 12 வயதுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொல்லப்பட்ட இதே குடும்பத்தை சேர்ந்த ஐந்தாவது நபரை பொலிசார் தொடர்பு கொண்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் அவருடன் பேசியதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த கொலை தொடர்பில் கைதான சிறுவனும், பொலிசார் தொடர்பு கொண்டதாக கூறப்படும் நபரும் ஒருவரா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

தற்போதைய சூழலில் கைதான சிறுவன் தொடர்பில் தகவல்கள் வெளியிடுவது சட்டவிரோதம் என்றே கனவா மாவட்ட ஷெரிப் மைக் ரதர்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி பகல் 10.40 மணியளவில், கொல்லப்பட்ட குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் அந்த குடியிருப்புக்கு சென்றதாகவும், ஆனால் இந்த கொடூர காட்சிகளை கண்ட அதிர்ச்சியில் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக குறித்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை என்பதாலையே, அவர் நேரடியாக நலம் விசாரிக்க சென்றுள்ளார்.

ஆனால், குடியிருப்பின் கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது எனவும், உள்ளே வன்முறைக்கு பின்னர் மூவர் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அருகாமையில் உள்ள குடியிருப்புக்கு சென்று, அங்கிருந்து 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், மேற்கொண்ட சோதனையில், குடியிருப்பின் உள்ளே நாலாவது நபரின் சடலத்தையும் கண்டெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நால்வரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்