ஜனாதிபதி டிரம்ப் வெளியேறியதும்... வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு ஜோ பைடனின் முக்கிய ஆணை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
347Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது பதவி காலம் முடித்து வெளியேறியதும், வெள்ளை மாளிகையை மொத்தமாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என புதிய ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்கத் தேர்தலில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை விட்டு அவர் வெளியேற உள்ளார்.

இந்த நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள 55,000 சதுர அடியில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை கட்டிடத்தை மொத்தமாக கிருமி நீக்கம் செய்ய புதிய ஜனாதிபதியான ஜோ பைடன் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி டிரம்ப் உட்பட அவரது முக்கிய அதிகாரிகள் பலர் சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையிலேயே, ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மொத்த வெள்ளை மாளிகையும் ஆழமாக கிருமி நீக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் தரப்பு, கதவு கைப்பிடிகளை மாற்றுவது மற்றும் மென்மையான அலங்காரங்களை நீக்குவது உள்ளிட்ட விரிவான பலகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று

ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த தமது முதல் 100 நாட்களில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தனது திட்டத்தை செவ்வாயன்று ஜோ பைடன் வெளியிட்டிருந்தார்.

பெரும்பாலான மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவது, பாதுகாப்புடன் பாடசாலைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது மற்றும் முகக்கவசம் அணிவதை குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாயமாக்குவது உள்ளிட்டவைகள் அதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனிடையே, சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் அமெரிக்காவில் இதுவரை 16 மில்லியன் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 300,000 தொட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் பைசர் நிறுவன தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்