நெருங்கும் நினைவு நாள்.. அதிகரிக்கும் பதற்றம்! மத்திய கிழக்கில் குவியும் அமெரிக்க போர் விமானங்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in அமெரிக்கா
4359Shares

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்கா தனது போர் விமானங்களை அனுப்புவதாக The United States Central Command (CENTCOM) அறிவித்துள்ளது.

2020 ஜனவரி 3ம் தேதி ஈராக்கில் அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது, ஆனால், அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை.

இந்நிலையில், குவாசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கும் நிலையில் பதிலடி கொடுக்க ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது தாக்குதல் நடத்தும் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்க தனது படைகளை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போர் விமானங்கள் அனுப்பியுள்ளது.

வடக்கு டகோட்டாவில் உள்ள மினோட் விமானப்படை தளத்திலிருந்து அமெரிக்க விமானப்படை B-52H 'Stratofortress' விமானக் குழுக்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டன.

மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்பிற்கான அமெரிக்க இராணுவத்தின் உறுதிப்பாட்டை காட்டுவதற்கும், குறுகிய காலத்தில் பெரும் போர் சக்தியை விரைவாகப் பயன்படுத்துவதற்கான தனித்துவமான திறனை நிரூபிப்பதற்கும் B-52H 'Stratofortress' விமானக் குழுக்கள் அனுப்பப்பட்டது என்று CENTCOM தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க நலன்களை குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், பதிலடி கொடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று CENTCOM Gen. Frank McKenzie கூறினார்.

நாங்கள் மோதலை விரும்பவில்லை, ஆனால் எங்கள் படைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது, எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என CENTCOM Gen. Frank McKenzie கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்