தேர்தலில் வெற்றிபெற ஜார்ஜியா அதிகாரியிடம் கெஞ்சிய அதிபர் டிரம்ப்! வெளியான தொலைபேசி அழைப்பு ஆதாரம்

Report Print Ragavan Ragavan in அமெரிக்கா
179Shares

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தில் ஜோ பைடனை வெல்லும் வகையில் 11,780 வாக்குகளை எப்படியாவது திரட்டுமாறு வெளியுறவுத்துறை செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருக்கு அழுத்தம் கொடுத்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியயுள்ளார். அதன் ஒலிப்பதிவு ஆதாரத்தை வாஷிங்க்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

இது, ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளியான இந்த அரை மணி நேர தொலைபேசி ஆடியோ பதிவில், குடியரசுக் கட்சியினரான ராஃபென்ஸ்பெர்கர் மற்றும் ஆளுநர் பிரையன் கெம்ப் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

மேலும், ஜோர்ஜியா தேர்தலின் முடிவை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கு தங்களால் இயன்றதைச் செய்யும்படி கேட்டுள்ளார்.

அதற்கு மறுப்பு பித்தெரிவித்த ராஃபென்ஸ்பெர்கர், 'ஜோர்ஜியாவில் பைடனின் வெற்றி நியாயமானது மற்றும் சரியானது" என அதிபரின் உத்தரவுக்கு எதிராக பதிலளித்துள்ளார்.

இந்த ஆடியோ ஆதாரம் வெளியானதிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்