அமெரிக்க தலைநகரில் அவசரநிலை பிரகடனம்! மேயர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in அமெரிக்கா
149Shares

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த 15 நட்களுக்கு பொது அவசரநிலையை நீட்டித்து அந்நகர மேயர் Muriel Bowser உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டடத்திற்குள் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கலவரம் மற்றும் பதட்டத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுத்ததாக Muriel Bowser குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டன் வாசிகள் நகரின் மைய பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஈடுபட வேண்டாம் என்றும் Muriel Bowser எச்சரித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் வாஷிங்டன் வாசிகள் மற்றும் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் நகரின் மைய பகுதிக்கு வெளியே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மோதலில் ஈடுபடும் நோக்கத்துடன் நமது நகரத்திற்கு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஈடுபடக்கூடாது, போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் அமைதியாக இருப்பதை உறுதி செய்ய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் Muriel Bowser குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்