ஒரே நாளில் அமேஸான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் ஒன் பணக்காரராகியுள்ள நபர்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
482Shares

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அமேஸான் நிறுவனரை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ஒருவர்.

அவர், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமைகள் கொண்டவரான, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலன் மஸ்க் (49)!

புதன் கிழமை நிலவரப்படி எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 181 பில்லியன் டொலர்களாக இருந்தது, அமேஸான் நிறுவனர் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 184 பில்லியன் டொலர்களாக இருந்தது.

ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் நாளொன்றிற்கு பத்து மில்லியன்கள் ஏறும் நிலையில், நேற்று ஒரே நாளில் அது உயர்ந்து 188.5 பில்லியன் டொலர்களாக உயர, ஒரே நாளில் அமேஸான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் ஒன் பணக்காரராகிவிட்டார் எலன் மஸ்க்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்