புடவையில் வந்து பெருமைபடுத்துவாரா கமலா ஹாரீஸ்? மிகுந்த எதிர்பார்ப்பில் இந்தியர்கள்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா
2306Shares

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், துணை அதிபராக பதவியேற்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் பாரம்பரிய உடையான புடவையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.

துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹரீஸ் பதவியேற்கவுள்ளார். குறிப்பாக, கமலா ஹாரிஸ் கருப்பின மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.

இவர் பதவியேற்பின் போது புடவையில் தோன்றுவது ஆசிய அமெரிக்கர்களிடையே தற்போதைய கொந்தளிப்பான சூழலில் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆற்றிய உரையில் வெள்ளை நிற டைட் பேன்ட் சர்டில் கமலா தோன்றினார். பெண்களுக்கான ஓட்டுரிமை இயக்கத்திற்கு அவருடைய தோற்றம் மற்றும் பேச்சு வழிவகுத்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸிடம், ஆசிய அமெரிக்க சமூகத்தினர், தாங்கள் அதிபராக பதவியேற்றால் இந்திய பாரம்பரிய உடையான புடவை அணவீர்களா என்று கேட்டதற்கு, ஹாரிஸ், அதிபரானால் பார்த்துக் கொள்ளலாம் என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய கலாச்சார அடையாளமாக 6-கஜ புடவை விளங்குகிறது. புடவையில் கமலா ஹாரிஸ் தோன்றும் பட்சத்தில் பிடென் மற்றும் ஹாரிஸின் கூட்டு நிர்வாகம் அங்குள்ள சிறுபான்மையினரை சிறப்பாக நடத்தும் என்பதற்கு சிறந்த அடையாளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கமலா ஹாரிஸ் தன் தாத்தா பாட்டி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தில் அவர் புடவை அணிந்திருப்பது சமூக வலைதளங்களில் ஏற்கனவே பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்