ஜனாதிபதி டிரம்பின் கடைசி விருப்பம் நிராகரிப்பு: மொத்தமாக கைவிட்ட அமெரிக்க நிர்வாகம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
893Shares

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வரும் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கடைசி விருப்பத்திற்கு அமெரிக்க இராணுவத் தலைமையகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமான ஆடம்பர நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

குறிப்பிட்ட சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

பொதுவாக புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா நாளன்று, அதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் புதிய ஜனாதிபதிக்கு வெள்ளைமாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், நாட்டின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை இதுவரை டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தவில்லை என்பது மட்டுமல்ல, தேநீர் விருந்துக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அதே நாளில், விழாவிற்கும் சில மணி நேரம் முன்பு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைநகர் வாஷிங்டனை விட்டு வெளியேற உள்ளார்.

அதற்கு முன்னர் தமது ஆதரவாளர்கள் முன்னிலையில், சிவப்புக்கம்பள வரவேற்புடன், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ஆடம்பரமான இராணுவ அணிவகுப்பும் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் தற்போது அவரது கோரிக்கையை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் நிராகரித்துள்ளது.

பொதுவாக கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஜனாதிபதி டிரம்ப் ஆடம்பரமான இராணுவ அணிவகுப்புகளை நடத்தியதுண்டு.

பல மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் இந்த விழாவானது, பொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் மேற்கொள்வதில்லை.

அதுவரையான அனைத்து மரபுகளையும் உடைத்து, சுதந்திரத்தினத்தன்று ஆடம்பரமான இராணுவ அணிவகுப்பை முன்னெடுத்தார் டொனால்டு டிரம்ப்.

தற்போது அவரது பிரியாவிடை நிகழ்விலும், அதுபோன்ற ஒரு கண்கவர் நிகழ்ச்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் வேளையில், டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் உள்ள தமது பண்ணை வீட்டின் அருகே அமைந்துள்ள கோல்ப் மைதானத்தில் இருப்பார் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, ஜனாதிபதி பதவியை துறக்கும் ஒருவர் முன்னெடுக்கவேண்டிய காலாகாலமாக பின்பற்றப்படும் எந்த நிகழ்விலும் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்