அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனை அவமதிப்பதற்காக ட்ரம்ப் செய்துள்ள மட்டமான செயல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
813Shares

உள்ளூர் மட்டத்தில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வார்கள்... பிறகு ஒன்றாக சேர்ந்துகொள்வார்கள், இது அனைவரும் அறிந்ததுதான்! ஆனால், உலகமே அன்னாந்து பார்க்கும் அமெரிக்க அதிபர் களும் அதே மாதிரி மட்டமான அரசியல் செய்வதை உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

தனக்குப் பின் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனை வெளிப்படையாக அவமதித்துள்ளார் ட்ரம்ப்.

இன்று பதவியேற்புக்காக ஜோ பைடன் வாஷிங்டன் டி.சிக்கு வரவேண்டும். ஆனால், அவருக்கு அரசாங்க விமானத்தை ஒதுக்கவில்லை ட்ரம்ப்.

ஆகவே, வேறு வழியில்லாமல், வாடகைக்கு தனியாக ஒரு விமானத்தை அமர்த்திக்கொண்டு பயணம் செய்துள்ளார் ஜோ பைடன்.

அத்துடன், ஜோ வாஷிங்டனில் கால் பதித்த நேரம், வெள்ளை மாளிகை ட்ரம்பின் பிரிவு உபச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மரியாதைக்குக்கூட ஜோ பைடனின் பெயரை உச்சரிக்கவோ, அடுத்து அதிபராக பதவியேற்பதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ கூட இல்லை ட்ரம்ப்.

மேலும், ஜோ பைடனுக்கு வாழ்த்துச் சொல்லாமலே வாஷிங்டனை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளது ட்ரம்ப் குடும்பம்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்