37 விநாடிகள் உடலை விட்டுப் பிரிந்த உயிர்... இறந்தபின் நடந்ததை நினைவுகூரும் இளம்பெண்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
603Shares

பிரசவத்தின்போது செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில், தனது உயிர் உடலை விட்டுப் பிரிந்ததை, தான் கண்ணால் கண்டதாக தெரிவித்துள்ளார் ஒரு அமெரிக்கப் பெண்.

கர்ப்பமாக இருந்த தனக்கு ஏதோ தவறாக நிகழப்போகிறது என்ற எண்ணம் சிகாகோவைச் சேர்ந்த Stephanie Arnoldக்கு அவ்வப்போது தோன்றி மறைந்ததாம்.

பிரசவத்தின்போது தன் இறந்துபோகலாம் என்ற அச்சம் தனக்கு இருப்பதாக தனது கணவரிடமும் தெரிவித்திருக்கிறார் Stephanie.

அவர் சொன்னது போலவே, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த Stephanie, சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்துமிருக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்து, குழந்தை Jacob நல்ல நிலையிலிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த அடுத்த கணம், Stephanieயின் உயிர் பிரிந்துள்ளது.

மருத்துவர்கள் பரபரப்படைந்து உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ள, 37 விநாடிகள் உயிரற்ற நிலையில் இருந்துள்ளது Stephanieயின் உடல். அப்போது, தானே தன் உடலைப் பார்த்தாக தெரிவிக்கிறார் Stephanie.

3 D திரைப்படத்தில் வருவதுபோல், சுற்றிலும் இருந்த சுவர்கள் எல்லாம் மறைந்துபோக, தன் உடலுக்கு சற்று மேல், தன் உடலுக்கு அருகிலேயே இருந்து, சுற்றிலும் நடப்பதை தான் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கும் Stephanie, மயக்க மருந்து நிபுணர் தன் காலுக்கருகில் பரபரப்புடன் நின்றதாகவும், செவிலியர் ஒருவர் தன் மார்பு மீது அமர்ந்து தனக்கு உயிர் மீட்கும் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவிக்கிறார்.

Image: NETFLIX

திரும்பிப் பார்க்கும்போது, சற்று தொலைவில் தன் மகள் நடப்பது எதுவும் தெரியாமல், தன் பாதுகாவலரான பெண்ணுடன் அமர்ந்திருப்பதையும் தான் கண்டதாக தெரிவிக்கும் Stephanie, முன்பு இறந்துபோன தனது பாட்டி உட்பட சில உறவினர்களையும் அந்த நேரத்தில் பார்த்ததாக தெரிவிக்கிறார்.

இது எப்படி நடந்தது, இது எப்படி நடந்தது என Dr Levitt என்பவர் பிதற்றிக்கொண்டிருக்க, சட்டென தன் வயிற்றில் ஏதோ இழப்பதைப் போல் உணர்ந்துள்ளார் Stephanie.

அடுத்த கணம், அவர் உயிர் பெற்றிருக்கிறார். Stephanie கூறுவதைக் கேட்க உடல் மயிர்க்கூச்செறிகிறது!

Image: NETFLIX
Image: NETFLIX

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்