அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் நிலையில், அவரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டிய அதி முக்கிய கோப்புகளுடன் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக உள்ளூர் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.
ஆனால் அந்த விழாவில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதுடன், உள்ளூர் நேரப்படி பகல் 8 மணிக்கு அவர் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தமது பண்ணை வீட்டிற்கு செல்ல உள்ளார்.
இதனால், அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரையான மரபுகள் மொத்தமும் டொனால்டு டிரம்ப் மீறுகிறார் என்பது மட்டுமின்றி,
தற்போது அமெரிக்க இராணுவ தலைமைக்கு புதிய தலைவலியையும் அவர் ஏற்படுத்தி செல்கிறார்.
JUST IN: President Trump departs the White House for final time as president. pic.twitter.com/RWAhuZTvy4
— NBC News (@NBCNews) January 20, 2021
பொதுவாக புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பதவியை துறக்கும் ஜனாதிபதி,
அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான அணுஆயுத கோப்புகளை புதிய ஜனாதிபதியிடம் நேரிடையாக ஒப்படைப்பது வழக்கம்.
ஆனால் டொனால்டு டிரம்ப் விழாவில் கலந்து கொள்ளாமல் பகல் 8 மணிக்கே கிளம்புவதால், அமெரிக்க ஜனாதிபதி எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்லப்பட வேண்டிய அந்த அணுஆயுத கோப்புகளையும் டிரம்ப் தம்முடன் எடுத்துச் செல்கிறார்.
இதுவே தற்போது இராணுவ தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் இந்த அணுஆயுத கோப்புகள் ஒப்படைப்பதும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்பின் இந்த முடிவை, முன்னாள் அதிகாரிகள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது பாதுகாப்பு தொடர்பானது, விளையாட்டல்ல என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இராணுவ தலைமை உடனடியாக தலையிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றதும், டிரம்பிடம் இருக்கும் அணுஆயுத கோப்புகளின் காலாவதி முடிவடையும் என்றும், அதன் பின்னர் அதற்கு மதிப்பு இல்லை எனவும் நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.