அமெரிக்காவின் துணை அதிபர் பதவியேற்பின் போது 2 பைபிள்களை கொண்டு வந்த கமலா ஹாரிஸ்! நெகிழ்ச்சி காரணம்

Report Print Santhan in அமெரிக்கா
890Shares

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் பழசை மறாக்காமல் தற்போது வரை உள்ளேன் என்பதை நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், அதைத் தொடர்ந்து துணை அதிபராக கமலாஹாரிசும் இன்று பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவின் அதிபர் ஜோ பைடனும், பைபிள் மீது சத்தியம் செய்து பதவிப்பிரமானம் எடுத்தார். அதே போன்று கமலாஹாரிசும் பைபிள்கள் மீது கை வைத்தே பதவிப்பிரமான எடுத்தார்.

இந்த பதவியேற்பின் கமலா ஹாரிஸ் 2 பைபிள்களை பயன்படுத்தினார். அதன் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

கமலா ஹாரிஸ் சிறுமியாக இருந்தபோது அவரது வீட்டிலிருந்து 2 வீடு தள்ளி ரெஜினா ஷெல்டன் என்பவர் வசித்து வந்துள்ளார்.

கமலா ஹாரிஸின் தாயார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் என்பதால் வீட்டிற்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

அந்தளவிற்கு பிசியாக இருப்பார். இந்த மாதிரியான சமயத்தில் பள்ளி முடிந்ததும் நேராக ரெஜினா வீட்டுக்குத்தான் கமலாவும், அவரது சகோதரி மாயாவும் செல்வார்களாம்.

அம்மா திரும்பி வரும் வரை அவர்களுக்கு ரெஜினாதான் அம்மாவாக இருப்பாராம். பசியாற சாப்பாடு போடுவது, கதை சொல்வது, பள்ளிக் கூட கதைகளைக் கேட்பது என்று ரெஜினா ஒரு தாயாக மாறி இரு குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார்.

இதை பலமுறை சொல்லி கமலா ஹாரிஸ் மகிழ்ந்துள்ளார். ரெஜினாவை தனது 2வது தாய் என்றே பூரிப்புடன் சொல்லி மகிழ்வார்.

அந்த 2-வது தாயின் பைபிளை வைத்துத்தான் இன்று தனது துணை அதிபர் பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தார். இது தனது 2-வது தாய்க்கு செலுத்தும் நன்றிக் கடனாகவும், கடமையாகவும் கமலா ஹாரிஸ் கருதுகிறார்.

அதே போன்று கமலா ஹாரிஸ் இன்று பயன்படுத்திய 2-வது பைபிள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி துர்குட் மார்ஷல் என்பவரின் பைபிள் ஆகும்.

இவர் மறைந்த சிவில் உரிமைப் போராளி ஆவார். இவரை தனது ஹீரோவாக கமலா ஹாரீஸ் பலமுறை கூறியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்