அமெரிக்க அதிபர் ஆனவுடன் ஜோ பைடன் போட்ட முதல் கையெழுத்து! பிறப்பிக்கப்பட்ட 10 உத்தரவுகள்: வெளியான முழு விபரம்

Report Print Santhan in அமெரிக்கா
182Shares

அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் முதல் நாளில் பிறப்பித்த 10 உத்தரவுகள் குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், அவர் தன்னுடைய முதல் நாளில், அதிரடியாக 10 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

  • உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவை விலக வைத்த டிரம்ப்பின் ஆணை செல்லாது.
  • சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் குழந்தைகளுக்கு அதிகப்படியான பாதுகாப்பு.
  • 2015- பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை மீண்டும் தொடர ஆணை.
  • இஸ்லாமிய நாடுகளில் இருது வருவோருக்கு டிரம்ப் விதித்த பயணத்தடை நீக்கம்.
  • பணி நிமித்தம் காரணமாக அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கும் திட்டம்.
  • மெக்சிகோ எல்லைச்சுவரை எழுப்புவதற்கான நிதி திரட்டலுக்கு தடை.
  • கொரோனாவை ஒழிக்க முகக்கவசம், தனி மனித இடைவெளி கட்டாயம்.
  • அமெரிக்காவில் நிலவும் வேலையின்மையை நீக்க 1.9 ட்ரில்லியன் டொலர் மதிப்பீட்டில் திட்டங்கள்.
  • பாலினம் மற்றும் நிற, இனவெறிக்கு எதிராக புதிய சட்டதிருத்தம்.
  • கொரோனாவால் சரிந்த புதிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய முயற்சிகள்.

ஜோ பைடனின் இந்த புதிய உத்தரவுகளில் பல வெளிநாட்டினரின் பல நாள் கோரிக்கைகளாக இருப்பதால், அவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்