அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வைத்தவனை பிடிக்க தீவிரம் காட்டும் FBI: தகவல் தருபவருக்கான சன்மான தொகை அதிகரிப்பு!

Report Print Ragavan Ragavan in அமெரிக்கா
155Shares

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் பைப் வெடிகுண்டு வைத்தவர்கள் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கான வெகுமதி தொகையை எஃப்.பி.ஐ அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி 6-ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதை எதிர்த்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தூண்டுதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைக்கு பெரும் களங்கம் ஏற்படும் விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கலவரத்தின்போது காங்கிரஸ் அதிகாரிகளை தாக்க முயன்ற ஆர்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே வரை சென்று கட்டிடத்தையும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். மேலும், கலவரத்தில் ஒரு காவல் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 5 கைத்துப்பாக்கைகள் பரிமுதல் செய்யப்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முன்னதாக, FBI கலவர நாளில் பைப் வெடிகுண்டுகளை வைத்த நபர்களை கண்டுபிடிக்க உதவவும் நபர்களுக்கு 50,000 டொலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

நீண்ட நாட்களாக அந்த நபர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், சில புகைப்பட அடையாளங்களை வெளியிட்டு, சந்தேக நபரின் இடம், பெயர் போன்ற தகவலை வழங்குபவர்களுக்கு இப்போது 75,000 டொலர் வெகுமதி அளிப்பதாக FBI அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்