கார் பார்க்கிங்கில் பாதுகாப்பு படையினர் செய்த செயல்; அதிபர் ஜோ பைடனை உடனடியாக மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்!

Report Print Ragavan Ragavan in அமெரிக்கா
425Shares

அமெரிக்க கேபிடல் வாகன நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினர் தங்கியிருந்தற்காக அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜனவரி 6-ஆம் திகதி அமெரிக்க கேபிடலில் நடந்த கலவரத்தையடுத்து, அதிபர் ஜோ பைடன் பதவியேற்பதற்காக பாதுகாப்பது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதற்காக 25,000 அமெரிக்க பாதுகாப்பு படையினர் வாஷிங்டனில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஜனவரி 20-ஆம் திகதி ஜோ பைடன் 46-வது அதிபராக பதவி ஏற்றதையடுத்து, அவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கேபிடல் கார் பார்க்கிங்கில் தங்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

ஏராளமான படையினர் சீருடையுடன் தரையில் படுத்துறங்கிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நிலையில், அது சர்ச்சையை கிளப்பியது.

பலரும் தேசத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினர் மதிப்புடன் நடத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் இவ்வாறு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தங்கவைக்கப்பட்டிருப்பது அவமானத்துக்குரியது என்றும் விமர்சங்களை எழுப்பினர்.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் நெரிசலான இடத்தில் பாதுகாப்பு படையினர் இவ்வாறு தங்கவைத்திருந்தது அச்சத்தை தூண்டியது. இதற்கு அரசியவாதிகளும். மாநில கவர்னர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து உடனடியாக தேசிய காவலர் பணியகத்தின் தலைவரை அழைத்த அதிபர் ஜோ பைடன், நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின்னர் உடனடியாக அவர்களை வசதியாக தங்கவைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்.

பின்னர், அமெரிக்க முதல் பெண்மணியான ஜில் பைடனும் பாதுகாப்பது படையினரை நேரில் சந்தித்து, தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், வெள்ளை மாளிகையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்களை கொண்டுவந்து வழங்கினார்.

வரவிருக்கும் நாட்களில் 19,000 பாதுகாப்பது படையினர் திரும்பி அனுப்பப்படவுள்ளனர், மீதம் உள்ள 7,000 பேர் வாஷிங்டனில் தங்கவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்