200 காமெராக்களை ஹேக் செய்து இளம்பெண்களின் அந்தரங்கங்களை கவனித்துவந்த நபருக்கு தண்டனை!

Report Print Ragavan Ragavan in அமெரிக்கா
61Shares

அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் செக்கூரிட்டி காமெராக்களை ஹேக் செய்து, இளம் பெண்களின் அந்தரங்க நடவடிக்கைளை படம்பிடித்து வந்த முன்னாள் ADT தொழில்நுட்ப ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எலக்ட்ரானிக் பாதுகாப்பு நிறுவனமான ADTயில் பணிபுரிந்த முன்னாள் தொழில்நுட்ப ஊழியர் டெலிஸ்போரோ அவில்ஸ் (35), கடந்த சில ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட ஏடிடி வாடிக்கையாளர் கேமரா ஊட்டங்களை உளவு பார்த்து வந்துள்ளார்.

குறிப்பாக கவர்ச்சிகரமான பெண்களை குறிவைத்த அவில்ஸ், அவர்கள் வீட்டில் உடைகளை மாற்றுவது, தூங்குவது அல்லது உடலுறவில் ஈடுபடுவதை தொடர்ந்து உளவு பார்த்துவந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், கடந்த நான்கு வருடங்களாக ADT வாடிக்கையாளர்களின் கணக்குகளை 9,600 தடவைகளுக்கு மேல் ரகசியமாக அணுகியுள்ளார்.

ADT-க்காக பணிபுரியும் போது, ​​குறிப்பிட்ட பெண்கள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டுள்ளார்.

பின்னர் அவர் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வாடிக்கையாளர்களின் ADT பல்ஸ் கணக்குகளில் சேர்ப்பார். சில சந்தர்ப்பங்களில், ஏவில்ஸ் பெண்களின் பாதுகாப்பு அமைப்பைச் சோதிக்க தற்காலிகமாக தனது கணக்குகளில் தன்னைச் சேர்க்க வேண்டும் என்று கூறுவார். அல்லது வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் அவர் அவ்வாறு செய்வார்.

இவ்வாறு பெண்களின் கணக்குகளில் அவரது மின்னஞ்சல் முகவரியைச் சேர்ப்பதன மூலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கேமரா ஊட்டங்களைப் பார்க்க சாதகமாக இருந்தது.

இவ்வாறு 200 வாடிக்கையாளர்களின் கணக்குகளை ஹேக் செய்த நிலையில், ஏவல்ஸ் இறுதியில் பிடிபட்டார்.

இந்நிலையில்ம் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால், இது தொடர்பாக ADT நிறுவனம் இப்போது மூன்று வெவ்வேறு வழக்குகளை எதிர்கொள்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்