மகனை இரண்டாவது மனைவியிடம் விட்டு வேலைக்கு சென்ற தந்தை! வீடு திரும்பியபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Report Print Ragavan Ragavan in அமெரிக்கா
56Shares

லாஸ் வேகாஸ் நகரில் இளம்பெண் ஒருவர் 4 வயது குழந்தையை துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஒருவர் தனது 4 வயது ஆண் குழந்தையை, தனது இரண்டாவது மனைவியான Patricia Ataligவின் (29) பொறுப்பில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 22-ஆம் திகதி, மலை 6 மணிக்கு அவர் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தனது இரண்டாவது மனைவி வீட்டில் இல்லை. அறைகளில் தேடிய பொழுது அவரது குழைந்தை பேச்சு மூச்சின்றி தரையில் கிடந்துள்ளது.

பதறிப்போன தந்தை, உடனடியாக அவசர உதவிக்கு அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த அவசரகால ஊழியர்கள் குழந்தையை பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது.

சோதனை முடிவில், குழந்தையின் வயிறு மற்றும் முதுகில் பல முறை அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் இறந்ததாகவும் தெரியவந்தது.

மேற்பட்ட விசாரணையில் Patricia தான் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பொலிஸார் அவரை கொலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெண் ஒருவர் குழந்தை என்றும் பாராமல் வளர்ப்பு மகனை ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்