சொந்த தாயாரை கழுத்தை நெரித்து கொன்று உடலை மறைவு செய்த கொடூர மகன்: சொன்ன காரணம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், சொந்த தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மறைவு செய்த இளைஞருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தின் Volusia மாவட்டத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

15 வயதேயான கிரிகோரி ராமோஸ் தமது கல்வி தொடர்பில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே,

அவரை தமது கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். 30 நிமிடங்களை தாயாரை கொலை செய்துள்ள ராமோஸ்,

பின்னர் தங்களது வாகனத்தில் வைத்து சடலத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளான்.

மட்டுமின்றி, தமது நண்பர்களை தொடர்பு கொண்டு, தங்கள் குடியிருப்பில் ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றவும் கோரியுள்ளான்.

கடந்த 2018 நவம்பர் மாதம் நடந்த இச்சம்பவத்தில் ராமோஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்,

தற்போது 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்புக்கு பின்னர் தமது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்திக்க நேர்ந்த ராமோஸ்,

தமது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், தமது தாயாரை உண்மையில் தாம் புரிந்து கொள்ள தவறியதாகவும் தெரிவித்துள்ளான்.

இந்த விவகாரத்தில் ராமோசின் இரு நண்பர்களுக்கும், குற்றத்திற்கு உதவியதாக கூறி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்