வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர்! தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஒரு வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்வுடே டர்டன் என்ற 37 வயது நபர் ஹாம்டனில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.

அங்கு சிறுமி உள்ளிட்ட குடும்பத்தார் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமியை வன்கொடுமை செய்யும் நோக்கில் மோசமாக டர்டன் செயல்பட்டிருக்கிறார். இதன்பின்னர் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

சம்பவத்துக்கு பின்னர் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் டர்டனை கைது செய்துள்ளனர்.

அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்