நிர்வாணமாக அங்குமிங்கும் ஓடிய பெண்! பின்னர் செய்த திருட்டு வேலை... இறுதியாக நடந்த சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares

அமெரிக்காவில் பெண்ணொருவர் மது போதையில் பொருட்களை திருடி கொண்டு ஓடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவை சேர்ந்தவர் மெலிசா டவுன் (53). இவர் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திருக்கிறார்.

அங்கு தான் தர வேண்டிய $154 பணத்தை கிரெடிட் கார்ட் மூலம் தர முயன்ற நிலையில் அவர் கார்ட் மூலம் பணம் செலுத்த முடியாமல் போனது.

இதையடுத்து கோபமடைந்த மெலிசா அங்கிருந்தவர்களை நோக்கி கத்திவிட்டு, சிலர் மீது எச்சில் துப்பிவிட்டு தப்பியோடினார்.

பின்னர் அருகில் இருந்த கடைக்கு சென்ற மெலிசா தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற பின் அங்குமிங்கும் ஓடினார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடையிலிருந்த துணிகளை திருடிய மெலிசா ஒரு துணியை அணிந்து கொண்டார்.

மேலும் கடைகளில் சில பொருட்களை உடைத்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

அந்த கடையில் மட்டும் மெலிசாவால் $740.50 மதிப்புள்ள பொருட்கள் நஷ்டமானது.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் மெலிசாவை அருகில் இருந்த வேறு மதுபான விடுதியில் வைத்து இறுதியாக கைது செய்தனர்.

அவர் மீது திருட்டு, அநாகரீக செயல்களில் ஈடுபட்டது தொடர்பிலான வழக்குகள் பதியப்பட்டது.

மெலிசாவின் ஜாமீன் தொகையாக $1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்