மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in அமெரிக்கா
0Shares

மேலும் இரண்டு மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

வெளியுறவுத்துறை செயலர் Antony Blinken வெளியிட்ட அறிவிப்பில், மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆளும் இராணுவ தலைவர்கள் குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களான விமானப்படை தளபதி ஜெனரல் Maung Maung Kyaw மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் Moe Myint Tun ஆகியோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையை தூண்டுபவர்கள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

பர்மா (எ) மியான்மர் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று வெளியுறவுத்துறை செயலாளர் Antony Blinken கூறினார்.

அமைதியான எதிர்ப்பாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தவும், அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்தவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் மியான்மர் இராணுவத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்று Antony Blinken அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மியான்மர் இராணுவத் தலைவரும் நாட்டின் புதிய ஆட்சியாளருமான மூத்த ஜெனரல் Min Aung Hlaing உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்