இலங்கை பெண்ணை பழுப்பு நிற அடிமை என்று அழைத்து கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்: அவரது சுயரூபம் தெரிந்தபோது...

Report Print Balamanuvelan in அமெரிக்கா
0Shares

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

ஆனால், Eric Schneiderman என்னும் அந்த பிரபலத்தின் அந்தரங்க வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. தான்யாவை அவர் ஒரு அடிமை போல் நடத்தியிருக்கிறார்.

தாம்பத்ய உறவின்போது, தான்யாவை அறைவதும், கழுத்தை நெறிப்பதும், முகத்தில் துப்புவதுமாக, மோசமாக நடந்துகொண்ட எரிக், நீ என் பழுப்பு நிற அடிமை, என்னை எஜமானே என்றுதான் அழைக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

எரிக்குடனான வெறும் ஓராண்டு கால வாழ்க்கையே கொடுமையாக இருந்திருக்கிறது தான்யாவுக்கு.

என்னை பிரிந்தால் கொலை செய்துவிடுவேன் என்று வேறு நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் ஒருவர் மிரட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் பயந்துபோய் வாழ்வைத் தொடர்ந்திருக்கிறார் தான்யா. ஆனால், உதவி வேறு பெண்கள் வடிவில் வந்திருக்கிறது.

ஆம், மேலும் மூன்று பெண்கள் எரிக் தங்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகாரளிக்க, அப்போதுதான் தான்யாவுக்கு தைரியம் வந்துள்ளது.

நான்கு பெண்களுமாக எரிக் மீது புகாரளிக்க, நான் யாரையும் தாக்கவில்லை, எல்லோருமே என்னுடன் விரும்பிதான் உறவு வைத்துக்கொண்டார்கள் என்று தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார் எரிக்.

ஒரு வழியாக, சமூக சேவகர் ஒருவரின் உதவியுடன் எரிக்கை பிரிந்த தான்யா, எரிக்குடனான தனது ஓராண்டு கால வாழ்வில் தான் அனுபவித்த கொடுமைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

''Assume Nothing' என்னும் அந்த புத்தகத்தில் இதுவரை பயந்து தான் அடக்கி வைத்த உணர்வுகளை எல்லாம் கொட்டிவிட்டார் தான்யா.

தன் மீதான குற்றச்சாட்டுகளையடுத்து, அவசர அவசரமாக தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எரிக். ஆனால், அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதன் பின் பெரிதாக வெளி உலகுக்கு தலை காட்டாத எரிக், எங்கோ ஒரு பள்ளியில் தியானம் கற்றுக்கொடுப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்