இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்

Report Print Shalini in காலநிலை

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது.

இதனால் நாளை 12.11மணி அளவில் கல்குடா, வெலிக்கந்தை, பொலன்னறுவை, அம்பன்பொல மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும்.

இதனால் அப்பகுதியில் அதிக வெப்பத்துடனான சூழல் காணப்படும்.

வெளியில் செல்லும் மக்கள் தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு செல்லுமாறும், கடும் வெப்பம் நிலவும் இடங்களில் வெகுநேரம் இருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்