வெள்ளப் பெருக்கால் ஆட்டம் கண்டது களனி ஆற்றின் மேல் போடப்பட்ட பாலம்! தற்காலிகமாக மூட முடிவு

Report Print Aasim in காலநிலை

கடுவலை நகரில் களனியாற்றுக்கு மேலாக போடப்பட்டுள்ள பாலம் இன்றிரவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

கடுவலை - பியகம நகரங்களை இணைக்கும் வகையில் கடுவலை நகர மத்தியில் களனி ஆற்றின் மேலாக பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு பல வருடங்களாகின்றது.

இந்நிலையில் தற்போதைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கில் பாலத்தின் அத்திவாரம், தூண்கள் என்பன ஆட்டம் கண்டுள்ளது. கரையோரத்தில் பக்கவாட்டுப் பகுதியும் ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாலத்தின் ஊடாக கடுவலை-பியகம இடையிலான போக்குவரத்தை நேற்று ஒருவழிப்பாதையாக மாற்றியும், இன்று முற்றாக தவிர்க்கும் வகையிலும் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் பாலத்தின் திருத்த வேலைகளுக்காக இன்று இரவு பத்து மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரை பாலம் முற்றாக மூடப்படவுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers