எதிர்வரும் நாட்களில் நிகழவுள்ள மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Samy in காலநிலை
205Shares
205Shares
lankasrimarket.com

தென்மேல் பருவ நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும், எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லி மீற்றர் வரையான பாரிய மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக, மேல், தென், மத்திய, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டங்களிலும், காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் அளவில் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக, வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில், காற்றின் வேகம் இடைக்கிடை, மணிக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும், ஏனைய கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம், இடையிடையே மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடல் கொந்தளிப்பாக மாறலாம் எனவும் வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்