இலங்கை வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம்! - ஆய்வு செய்யும் அமெரிக்கா

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் வான்பரப்பின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் மாற்றம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

அதற்கமைய அமெரிக்கா விஞ்ஞானிகள் குழுவொன்று இன்று காலை இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.

இலங்கை மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஹரிகேன் ஹன்டர்ஸ் படையின் விமானிகள் மற்றும் வளிமண்டலவியல் மாற்றம் தொடர்பிலான ஆய்வாளர்கள் சிலர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சிவில் விமான சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுமார் இரு வாரங்களுக்கு தங்கியிருந்து ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இந்த குழுவில் இலங்கை விஞ்ஞானிகள் சிலரும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்