ஆறு மாதங்களின் பின்னர் வட மாகாணத்தில் ஏற்பட்ட மாற்றம்! மகிழ்ச்சியில் மக்கள்

Report Print Vethu Vethu in காலநிலை

கடந்த ஆறு மாதங்களின் பின்னர் வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீண்ட காலமாக நிலவி வந்த வறட்சியான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளத.

வடக்கின் பல பிரதேசங்களில் அடைமழை பெய்வதனால் அந்த பகுதியில் வாழும் விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த நாட்கள் முழுவதும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்துள்ளது.

எனினும் அடைமழை பெய்த போதிலும் நீரேந்து பகுதிகளில் போதியளவு நீர் கிடைக்கவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்