இன்று முதல் காலநிலையில் மாற்றம்!

Report Print Murali Murali in காலநிலை

மத்திய, சப்ரகமுவ, மேற்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு காலை வேளையில் பனியுடன் கூடிய காலநிலை நிலவும்.

இன்றை தினத்தின் அதிக வெப்பநிலை இரத்தினபுரி பிரதேசத்தில் நிலவும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்