வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மிகவும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்படி வடமேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை , ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அதிக வெப்பமான வானிலையின் போது உடல் நீர் இழப்பை தவிர்ப்பதோடு, நோய் ஏற்படாது தடுக்கும் வலிமுறைகளை கையாளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்