திடீர் காலநிலை மாற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Steephen Steephen in காலநிலை

மின்னல் தாக்கம் மற்றும் கனமழை தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரி இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றிரவு 11.30 மணி வரை செல்லுப்படியாகும் வகையில் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, தென், ஊவா, வடமேல், மேல்,வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழையுடன் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும்.

சபரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், தென் மாகணங்களில், அனுராதபுரம் மாவட்டத்தின சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட கனமழை பெய்யக் கூடும்

இடியுடன் கூடிய கனமழையுடன் மணிக்கு சுமார் 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசக் கூடும்.

மின்னல் மற்றும் இடி காணப்படும் இடங்களில் பாதுகாப்பான நடவடிக்கைகளை கையாளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வெட்ட வெளிகளில், மரங்களுக்கு கீழ் இருக்காது பாதுகாப்பான கட்டிடங்களிலும் பாதுகாப்பான வாகனங்களில் இருக்க வேண்டும்.

வயல் வெளிகள், தேயிலை தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், நீர் தேக்கங்கள் போன்ற திறந்த வெளியில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

கம்பி இணைப்புகளுடன் கூடிய தொலைபேசி, மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சைக்கிள், உழவு இயந்திரம், படகு போன்ற திறந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கடுமையான காற்று வீசும் என்பதால், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரியக் கூடும் என்பதால், அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவசர நிலைமை ஏற்பட்டால் பிரதேசத்தில் உள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளின் உதவியை நாடுங்கள் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers