காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை! பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்

Report Print Vethu Vethu in காலநிலை

எதிர்வரும் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வானிலை தெடார்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையினால் பல மாவட்டங்களுக்கு 200 மில்லி மீற்றர் வரையிலான அடைமழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை அடைமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் 150 - 200 மில்லி மீற்றர் வரையலான அடைமழை பெய்யும் சாத்தியமுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டவங்களில் 100 - 150 மில்லி மீற்றர் வரை அடை மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊவா மாகாணத்திலும், குருணாகல் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக மத்திய மலை நாட்டிலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைக்கிடையே 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்