முல்லைத்தீவில் தொடரும் அடைமழை!

Report Print Mohan Mohan in காலநிலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று முற்பகல் முள்ளியவளை பகுதியில் காற்றுடன் கூடிய அதிகளவிலான மழை பெய்தமையினால் பாரிய மரங்கள் சில அடியோடு விழுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் பெரிய மரங்கள் மின் கம்பிகள் மேல் விழுந்துள்ளமையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களாக தொடர் அடைமழை பெய்து வருகின்றமையினால் கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, செல்வபுரம், முள்ளியவளை உள்ளிட்ட தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்