கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அடைமழை!

Report Print Vethu Vethu in காலநிலை

நாடு முழுவதும் விசேடமாக வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களில் 100 - 150 மில்லி மீற்றர் அளவு அடை மழை பெய்யக்கூடும்.

விசேடமாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் இவ்வாறு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 70 - 100 மில்லிமீற்றர் அளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்