வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் அடைமழை! எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Report Print Vethu Vethu in காலநிலை

நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் நாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் காலை நேரத்தில் மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலை நேரத்தின் சில இடங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடி, மின்னல் மூலம் ஏற்படும் ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்