கொழும்பு மற்றும் காலி கடற்பகுதிகளில் இன்று மழை பெய்யலாம்

Report Print Ajith Ajith in காலநிலை

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவையிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தவிர சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் மாத்தறை காலி மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின் மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணம், ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியாவில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காற்று சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலையிலும் வீசும்.

இந்த நிலையில் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை மையம் கோரியுள்ளது.

கடல் பிரதேசத்தில் மட்டக்களப்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

கொழும்பு மற்றும் காலி கடற்பகுதிகளிலும் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் கூறியுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்