வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம்: நாசாவின் பகீர் தகவல்!

Report Print Arbin Arbin in காலநிலை
வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம்: நாசாவின் பகீர் தகவல்!

வரலாற்றிலேயே அதிக வெப்பமான மாதம் இந்த ஆண்டின் ஜூலை மாதம்தான் என நாசா தெரிவித்துள்ளது. வெப்ப அளவினை பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்த 1880-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலகட்டத்தில் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில்தான் அதிக‌ட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள வெப்பநிலைகளை கணக்கிட்டதில் 1951-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரையில் சராசரியாக பதிவான வெப்பநிலையை விட 2016 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 0.84 சென்டி கிரே‌ட் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதேப்போன்ற தகவலை அமெரிக்க தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் தெரிவித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தின் சாதனையை முறியடித்தப்படி வெப்பநிலை இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதே வெப்பநிலை நீடிக்கும் எனில் 2016 ஆம் ஆண்டே வரலாற்றில் அதிக வெப்பத்தை பதிவு செய்த ஆண்டாக இருக்க முடியும் என அவுஸ்திரேலியாவின் காலநிலை விஞ்ஞானி David Karoly தெரிவித்துள்ளார்.

இந்த அதிகபடியான வெப்ப நிலைக்கு காரணம், உலக வெப்பமயமாகுதல் மற்றும் எல். நினோ உள்ளிட்டவை இணைந்து பசிபிக் பகுதியில் வெப்பமான நீரை உருவாக்கியதால் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments