அடுத்த வாரத்தில் மீண்டும் ஒரு மோசமான புயல் தாக்கும் அபாயம்!

Report Print Thayalan Thayalan in காலநிலை

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகிய ‘ஓகி’ புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாரிய புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஓகி’ புயலாக உருவெடுத்து தென் தமிழகத்தை புரட்டி போட்டது.

இதனால் 16 மணிநேரத்துக்கும் மேலாக சூறைக்காற்று வீசியதுடன் கடும் மழைப்பொழிவும் இருந்தது.

மேலதிக தவல்களுக்கு

இந்தப்புயல் தமிழ்நாட்டின் கடற்கரையினைத் தாக்காது, அரபிகடல் நோக்கி நகர்ந்து செல்வதால் இது தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்தமான் கடல்பகுதிக்கு அருகில் நேற்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது எதிர்வரும் 3ஆம் திகதி வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காற்றழுத்தம் புயலாக மாறுமிடத்து தமிழகத்தின் கரையோரப்பகுதிகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ‘ஓகி’ புயலை விடவும் மோசமான பாதிப்புகளை இந்தப்புயல் ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers