விலங்குகளுக்கு பாலூட்டும் பெண்கள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

ராஜஸ்தானில் வசித்து வரும் Bishnoi இன மக்கள் மான்கன்றுகளுக்கு பாலூட்டி வருவது மனித நேயத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டுகிறது.

சுமார் 550 வருடங்களாக இயற்கையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இம்மக்கள், இயற்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.

விலங்குகளையும், தாங்கள் பெற்ற குழந்தைகளையும் ஒன்றாகவே பார்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு பாலுட்டும் அதே மார்பில், தான் வளர்த்து வரும் மான் கன்றுகளுக்கும் பாலூட்டுகிறாள்.

அருகில் உள்ள காட்டில் வளரும் விலங்குகளோடு, குழந்தைகளும் சேர்ந்து விளையாடுகின்றனர், இதுகுறித்து அங்கு வசித்துவரும் Mangi Devi Bishnoi (45) என்ற தாயார் கூறியதாவது, மான் குட்டிகள் எங்களுடைய வாழ்க்கை, எங்களுடைய குழந்தைகள் ஆவார்.

நான் அவர்களுக்கு, பால் கொடுப்பது, உணவளிப்பது என அனைத்தையும் செய்கிறேன். இதில் எனக்கு எவ்வித பராபட்சமும் கிடையாது என கூறியுள்ளார்.

RoshiniBishnoi(21) என்ற மாணவி கூறியதாவது, நான் குட்டி மான்களோடு தான் வளர்ந்தேன், மான்களுடன் வளர்ந்த காரணத்தால், அவற்றை நான் ஒரு சகோதரனாகவோ, சகோதரியாகவோ தான் பார்க்கிறேன், அதனுடன் விளையாடும், பேசுவோம்.

மான்களுக்கும் நாங்கள் பேசும் மொழி ஓரளவுக்கு புரியும், அவற்றினை நாங்கள் விலங்குகளாக பார்க்காமல், எங்கள் குடும்ப உறுப்பினர்களாக பார்க்கிறோம்,

எனது பெற்றோரும் எனக்கும், எங்கள் வீட்டில் வளரும் மான்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் காட்டமாட்டார், அதனை எங்கள் வீட்டில் வைத்து பத்திரமாக பாதுகாப்போடு அதிக அன்பினை செலுத்தி, வளர்த்து வருகிறோம் என்றும் இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments