மாதவிடாய் பிரச்சனையா? அதற்கு இவை தான் காரணமாம்

Report Print Printha in பெண்கள்

பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருந்தால், இதயநோய், புற்று நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவை தடுக்கப்படுகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அதுவே மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது காலதாமதமாக வந்தாலோ, அது அவர்களின் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும்.

மாதவிடாய் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?

  • அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, டயட் என்று இருக்கும் போது, அது உடலின் பாலின ஹார்மோன்களை சுரக்க இன்றியமையாமல் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை குறைப்பதால், சீரற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

  • தைராய்டு பிரச்சனை, மன நோய் ஆகிய பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் வீரியங்கள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

  • பெண்கள் அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் செய்வதால், நேரம், காலம் மாறுபடுகிறது. இதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

  • கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது , ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகி, உடல் பருமனாகி, மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

  • மன அழுத்தம், மன பதட்டம் அதிகரிக்கும் போது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அதிக மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

  • தினமும் போதிய உறக்கம் இல்லாமல் இருந்தால், ஹார்மோனை பாதிக்கும். எனவே முறையற்ற தூக்கம் இருந்தால், அது சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்தும்.

  • செடிகளுக்கு போடும் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் உரங்களால் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பை பாதிப்படையும். எனவே அவற்றை பெண்கள் உபயோகிக்கும் போது, மாதவிடாய் பிரச்சனைகள் வரலாம்.

  • வயது அதிகரிப்பதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணமாகும். ஏனெனில் மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரில்லாமல் மாதவிலக்கு ஏற்படும். எனவே இதை தவிர்க்க முடியாது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments