பிடிவாதக்குணம் உள்ள பெண் மனைவியாக அமைந்தால்?

Report Print Printha in பெண்கள்

பிடிவாத குணமுடைய பெண்கள் தங்களின் மனைவியாக அமைந்தால், நம் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிடும் என்று சில ஆண்கள் கருதுவார்கள் அல்லவா?

ஆனால் அது உண்மையில்லை. அந்த பெண்களிடம் உள்ள உண்மையான சிறப்பு மிக்க குணங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

பிடிவாதக்குணம் உள்ள பெண்களின் சிறப்புகள் என்ன?
  • கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இருக்கிறது.
  • பிடிவாதம் உள்ள பெண்களின் குறிக்கோள் பொருட்களை வாங்குவதில் மட்டும் இருக்காது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும்.
  • இல்லற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத பெண்களிடம் இருக்கும். இவர்கள் தனக்கு வேண்டாதவை மீது ஆசைப்பட மாட்டார்கள். அதே போல தேவையானதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
  • ஒருவர் மீது அவர்கள் வைக்கும் காதல் மிகவும் அழகாகவும், நேர்மையாகவும் இருக்கும். பிடிவாத குணமுடைய பெண்கள் அழுதாலும், கோபப்பட்டாலும், அன்பு காட்டினாலும் முழு மனதுடன் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள்.
  • பிடிவாதக்குணம் உள்ள பெண்கள், அவர்களுக்கு பிடித்தவர்கள் ஒரு செயலில் சோர்வுற்று நின்றால் அவர்களை பிடிவாதமாக அச்செயலில் ஈடுபடுத்தி வெற்றி பெற வைப்பார்கள்.
  • பிடிவாத குணம் கொண்ட பெண்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை நேருக்கு நேராக பேசி விடுவார்கள், இதனால் சண்டைகள், சச்சரவுகள், கடுமையாக இருந்தாலும், அது கவலைகளை மறக்க செய்து, சுவாரஸ்யமானதாக மாற்றும்.
  • பிடிவாதம் இருக்கும் அளவிற்கு அவர்களிடம் அனுதாபமும் இருக்கும். சூழ்நிலை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்து கொள்வார்கள்.
  • பிடிவாத குணமுடையவர்களின் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
  • பிடிவாதமுடைய பெண்கள் வேலை, மற்றும் இல்வாழ்க்கையில் வீடு, பொருட்கள் , சேமிப்பு போன்றவற்றில் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் கூட சீராக நடந்து கொள்வார்கள்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments