மாதவிடாய் தவிர வேறு எதற்கெல்லாம் உதிரப்போக்கு வெளிப்படும்?

Report Print Printha in பெண்கள்
165Shares
165Shares
Seylon Bank Promotion

மாதவிடாயை தவிர வேறு எந்த காரணங்களினால் உதிரப்போக்கு வெளிப்படும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மாதவிடாய் தவிர்த்து வேறு என்ன காரணங்களால் உதிரப்போக்கு ஏற்படும்?

  • உள்ளுறுப்புகள், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக கூட உதிரப்போக்கு ஏற்படலாம்.

  • மருத்து, மாத்திரைகளை அதிகமாக அல்லது நீண்ட நாட்கள் உட்கொண்டால், அவர்களுக்கு உதிரப்போக்கு ஏற்படும்.

  • கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், அது நம் உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பின் அளவை மாற்றி மாதவிடாய் கோளாறுகளை உண்டாக்கும்.

  • பாலியல் தொற்று நோய் ஏற்பட்டால் கூட உதிரப்போக்கு ஏற்படக்கூடும். ஆனால் இதன் அறிகுறி வழக்கமான மாதவிடாய் போன்றே தோன்றும்.

  • பாலியல் தொற்றுக்கு சிகிச்சை எடுக்காமல் விட்டால், அது பிறப்புறப்பில் தொற்று ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

  • கர்ப்பத்தடை சாதனம் பயன்படுத்துவதால் கூட முறையற்ற வகையில் உதிரப்போக்கு ஏற்படும். அதுவும் இதனால் ஏற்படும் உதிரப்போக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை விட அதிகமாக இருக்கும்.

  • தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சுரந்தாலோ மாதவிடாயில் மாற்றங்கள் உண்டாகும்.

  • உடலுறவை கடுமையாக செய்வதாலோ அல்லது பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இல்லாத போது உடலுறவு மேற்கொண்டாலோ உதிரப்போக்கு உண்டாகும்.

  • கர்ப்பப்பையில் ஏற்படும் தொற்று நோய், கர்ப்பப்பை கட்டி ஆகிய காரணத்தினாலும் கூட உதிரப்போக்கு அதிகமாக உண்டாகும்.

  • கர்ப்பப்பை வாய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக கூட உதிரப்போக்கு இருக்கலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்