பெண்களே உஷார்: பாலியல் பலாத்காரம் செய்ய ஆண்கள் செய்யும் புதிய ட்ரிக்

Report Print Printha in பெண்கள்
447Shares
447Shares
lankasrimarket.com

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஆண்கள் தற்போது ஒரு புதிய உத்தியை கையாளுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண்ணை பரிசோதனை செய்ததில், அந்த பெண் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டுத்தப்பட்டதையும், அவரது ரத்தத்தில் Rohypnol என்ற மருந்து பொருள் கலந்திருப்பதையும் மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதாம்.

தூக்கத்திற்கு உதவும் இந்த Rohypnol எனும் சிறிய மாத்திரையை பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணின் சுயநினைவை இழக்க செய்வதற்காக அவர்கள் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுத்து விடுகின்றனர்.

Rohypnol மாத்திரையின் தன்மை எப்படி?

Rohypnol எனும் மாத்திரை எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது, அதோடு இதற்கு என்று தனி சுவையோ, கலரோ கிடையாது.

அதனால் இந்த மாத்திரையை பானத்தில் கலக்கும் போது, அந்த பானத்தின் கலரும், சுவையும் மாறாமல் இருக்கும். அதனால் இந்த மாத்திரை கலந்த பானத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

இந்த மாத்திரை சாப்பிட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும், அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுக்கு வராது.

அதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் கருத்தரிப்பதைத் தடுக்கிறதாம்.

அதனால் பாலியல் பலாத்காரம் செய்பவர் Paternity test மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்கவும் இந்த மாத்திரை உதவுகிறது. எனவே பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்