'மெனோபாஸ்'கான அறிகுறிகள்: பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Printha in பெண்கள்

பெண்களின் குறிப்பிட்ட வயதிற்கு மேல் சினைப்பை கருமுட்டை வெளியிடுவதை நிறுத்தும் போது, மாதவிடாய் நின்றுவிடும். தொடர்ந்து ஓராண்டுக்கு மாதவிலக்கு இல்லை என்ற நிலையை மெனோபாஸ் என்பார்கள்.

இம்மாற்றம் 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு நிகழலாம். ஆனால் அதற்கு முன் பெண்களின் 40 வயதிலே மெனோபாஸின் அறிகுறிகளை எதிர்க்கொள்வார்கள்.

பெண்களின் மெனோபாஸை உணர்த்தும் அறிகுறிகள்?

  • சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான அல்லது குறைவான உதிரப்போக்கு, பிறப்புறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.

  • ஒருவித எரிச்சல், கோபம், சரும வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் இவை அனைத்தும் மெனோபாஸின் அறிகுறிகள்.

  • மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு சோர்ந்து போவது, பயம், பதற்றம், தூக்கமின்மை, ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.

  • சிலருக்கு மெனோபாஸ் அறிகுறியாக கால்சியம் குறைபாடு, எலும்புத் தேய்மானம், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

  • திடீரென உடல் கதகதப்பாவது அல்லது சூடாவது, இனம்புரியாத மன அழுத்தம், சலிப்புத் தன்மை, தாழ்வான எண்ணங்கள், நம்பிக்கைக் குறைவு, அழுகை போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.

தீர்வுகள் என்ன?

  • அனைவரும் எதிர்கொள்ள நேரிடும் அறிகுறிகள் மற்றும் பிரச்சனைகளை ஒரே வயதுள்ள பெண்களோடு கலந்து பேசி, பகிர்ந்துக் கொள்ளலாம்.

  • தினமும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் என்று ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

  • பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை போக்க மனநல ஆலோசகர் மற்றும் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.

  • உடல்நிலை, மனநிலை குறித்த அச்சத்தை தவிர்த்து, தனக்குப் பிடித்த செயல்களில் மனதைச் செலுத்தலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்